பெற்றோர்களிடம் கருத்து கேட்புக்குப்பின் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு: தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

2 July 2021, 3:58 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் அடுத்த மாதம் மருத்துவக் கல்லூரி திறக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், கொரோனா படிப்படியாக குறையும் பட்சத்தில் பள்ளிகளும் திறக்க பெற்றோர் உடன் கலந்து ஆலோசனை செய்யப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சித்தானந்தா குழுக்கள் கோவிலில் பாலூட்டும் தாய்மார்களுக்கு என சிறப்பு அறையை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், தற்போது கொரோனா நோய்த் தொற்றானது குறைந்து வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு முன்பாகவே அனைத்து ஆன்மீக தலங்களும் திறக்கப்பட்டதாக கூறிய அவர்,

மருத்துவ படிப்பு மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் முலம் முழு பாடங்களை படிக்க முடியாததால் நேரடி வகுப்புகள் தொடங்க வேண்டும் என மருத்துவ கல்லூரியினர் கேட்டு கொண்டுள்ளனர். அதே போல் மருத்துவ மாணவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் முதற் கட்டமாக மருத்துவ கல்லூரிகள் திறப்பத்தர்காக பரிசிலனை செய்து கொண்டிருப்பதாகவும், கோரோனா நோய் தொற்றின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகள் திரப்பு குறித்து முடிவு செய்யபடும் என்றும், பெற்றோரிடம் கருத்து கேட்ட பின் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

Views: - 340

0

0