திருச்சியில் குறைந்து வரும் கொரோனா தாக்கம்…. சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி…

17 August 2020, 8:33 pm
Quick Share

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்து வருவதாகவும், முகக் கவசம் பயன்பாடு அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கள ஆய்வு மேற்கொண்டார். பின்னர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:- திருச்சி மாவட்டத்தில் 903 கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி மாவட்டத்தை பொருத்தவரையில் நோய் உறுதித்தன்மை 5.96 சதவீதமாக உள்ள அதேவேளையில் தமிழகம் முழுவதும் 8.50 ஆக உள்ளது.

சேலம், கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி, கடலூர் உள்ளிட்ட தொற்று அதிகம் கண்டறியப்பட்டுள்ள மாவட்டங்களில் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போன்று 10 சதவீதத்திற்கு மேல் தொற்று பரவியுள்ள மாவட்டங்களில் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் RTPCR சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை தமிழகத்தில் 38 லட்சம் மதிப்பீட்டில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது இது மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கூடுதலாகும். திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தாக்கம் குறைந்து. மாஸ்க் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 1.79 லட்சம் படுக்கை வசதியுள்ளது. 85 முதல் 90 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் 3,500 வென்டிலேட்டர் கருவிகள் உள்ளன.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை 136 வென்டிலேட்டர் கருவிகள் உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை 136 தனியார் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. திருச்சியில் மட்டும் 6 தனியார் பரிசோதனை மையங்கள் உள்ளது. தனியார் பரிசோதனை மையங்களில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, அது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்து நிலையில் 10 தனியார் மருத்துவமனைகள் கூடுதலாக வசூலித்த பணத்தை திருப்பி தந்துள்ளன. அதேபோல இரண்டு மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Views: - 26

0

0