ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை:பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Author: Udhayakumar Raman
24 July 2021, 1:56 am
Quick Share

சென்னை: ஜார்ஜ் பொன்னையாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சென்னை பெரம்பூரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாரத மாதாவையும் பிரதமர் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரையும் அவதூறாக பேசியதாக ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வட சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள ஜார்ஜ் பொன்னையா மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்றும், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க வேண்டும் எனவும் கோஷமிட்டனர். மேலும் தி.மு.கவிற்கு இந்துக்கள் யாரும் ஓட்டுப் போடவில்லையா என திமுகவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜார்ஜ் பொன்னையா மற்றும் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Views: - 89

0

0