ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பணி ஓய்வு பலன்களை உடனடியாக வழங்க கோரிக்கை
28 February 2021, 5:34 pmநீலகிரி: 40 ஆண்டுகளாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்க வழங்க வேண்டிய பணி ஓய்வு பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என ஆதிவாசி விகாஸ் பரிசத்தின் மாநிலத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் ஆதிதொல்குடி பழங்குடியினர் கூட்டமைப்பின் முதலாவது மாநில செயற்குழு கூட்டம் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் 40 ஆண்டுகளாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்க வழங்க வேண்டிய பணி ஓய்வு பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். நீலகிரியில் உள்ள படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 36 வகையான பழங்குடியினர் தமிழகத்தில் வசித்து வரும் நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் பழங்குடியினருக்கு சுழற்சி முறையில் சட்டமன்ற தொகுதி ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.
அப்படி ஒதுக்கீடு செய்யாத பட்சத்தில் பழங்குடியினர் கூட்டமைப்பின் மூலம் நீதி மன்றத்தை நாடுவோம். எனவும், பழங்குடியினருக்கு வழங்க வேண்டிய அனைத்து சலுகைகளும் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் தமிழ்நாடு பழங்குடியினர் கூட்டமைப்பு தலைவர் அழகிய நம்பி, ஆதி பழங்குடியினர் நலச் சங்க பொதுச்செயலாளர் குமார், படுக தேச பார்ட்டி நிறுவனர் மஞ்சை மோகன் மற்றும் தமிழகத்தில் உள்ள பழங்குடியினர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
0
0