உள்ளூர் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தர கோரிக்கை: செட்டிநாடு சிமெண்ட் ஆலையை பொதுமக்கள் முற்றுகை

Author: Udayaraman
2 August 2021, 5:31 pm
Quick Share

அரியலூர்: உள்ளூர் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும் என கீழப்பழூரில் உள்ள செட்டிநாடு சிமெண்ட் ஆலையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள செட்டிநாடு சிமெண்ட் ஆலையை காந்தி நகர் மக்கள் இன்று முற்றுகையிட்டனர். இதில் ஆலை நிர்வாகம் உள்ளூர் படித்த இளைஞர்களுக்கு வருடத்திற்கு 10 பேருக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும் எனவும், ஆலையில் இரவு நேரங்களில் புகை வெளியிடுவதை கண்டித்தும் போராட்டம் நடைப்பெற்றது. மேலும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழப்பழுவூர் போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் ஆலை நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், கிராம மக்கள் என முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதியளித்தின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 80

0

0