பீன்ஸ் விலைச்சல் குறைவு தரமான விதைகள் வழங்க விவசாயிகள் கோரிக்கை

Author: kavin kumar
20 August 2021, 1:56 pm
Quick Share

திண்டுக்கல்: கொடைக்கானலில் பீன்ஸ் விலைச்சல் குறைவு தரமான விதைகள் வழங்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல் பகுதிகளான பள்ளங்கி, கோம்பை, வில்பட்டி, அட்டுவம்பட்டி, செண்பகனுர், பிரகாசபுரம், ஐயர்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் மலைக் காய்கறிகளான உருளை, கேரட், பீன்ஸ், நூக்கல், முள்ளங்கி, பீட்ருட் போன்றவை விளைவிக்கப்படுகிறது. தற்போது விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்குதங்களது நிலங்களில் முன்பு பீன்ஸ் பயிரிட்டனர். கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மழை இல்லாமல் பீன்ஸ் பயிர் விளைச்சலின்றி காணப்பட்டது. இதனால் செடிகளில் மஞ்சள் நோய் ஏற்பட்டும்,வெள்ளைப் பூச்சி தாக்கத்தால் செடிகள் கருகி விடுகிறது பீன்ஸ் காய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறது. ஒரு சில நேரங்களில் பெய்யும் மழையால் பீன்ஸ் பயிர்களில் மருந்து தெளித்தும்,

உரமிட்டு செடியை காப்பாற்றினாலும் பீன்ஸ் விளைச்சல் இல்லை. இதனால் பீன்ஸ் பயிரிட்ட அனைத்து விவசாயிகளும் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் கொடைக்கானல் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் உரங்கள், விதைகள், பூச்சி கொல்லி மருந்துகள் தரமாக உள்ளதா என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும், தரமில்லாமல் விற்பனை செய்யப்படும், விவசாய இடு பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் தோட்டக்கலைத் துறை அலுவலகங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள், உரங்கள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 195

0

0