குமரி ஊராட்சிக்கு சொந்தமான சுற்றுச்சுவர் இடிப்பு: உரிய நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புகார்

21 January 2021, 7:35 pm
Quick Share

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே உள்ள வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் ராஜசெல்வி(44). இவர் கோவளம் ஊராட்சி மன்ற 1வது வார்டு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது;- கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு குண்டல் கிராமத்தில் 1வது வார்டில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் தாணுலிங்க நாடார் பெயரில் ஒரு பொது நூலகமும், ஊராட்சியால் வழங்கப்பட்ட தொலைக்காட்சி அறையும் அந்த அறையில் தொலைக்காட்சி பெட்டி மற்றும் அது சம்பந்தமான பொருட்களும் உள்ளளன. மேலும் சிறுவர் பூங்கா, சிறுவர்கள் விளையாடும் ராட்டினம், ஊஞ்சல் பலகை உள்ளிட்ட விலைமதிப்பு மிக்க விளையாட்டுப் பொருட்கள் இருந்தன.

இதை சிலர் ஆக்கிரமிக்கும் நோக்கில் பின்புறம் உள்ள ஊராட்சிக்கு உட்பட்ட சுற்றுச்சுவரை ஜேசிபி இயந்திரம் கொண்டு உடைத்து பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதன் மொத்த மதிப்பு சுமார் ஒரு கோடி ஆகும். எனவே ஊராட்சிக்கு சொந்தமான இந்த நிலத்தை மீட்டு சேதப்படுத்தியும், பொருட்களை திரருடிச் சென்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பொருட்களை மீட்டுத்தரவும் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 0

0

0