ஒப்பந்த பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி மின்வாரியம் முன்பு ஆர்ப்பாட்டம்

Author: kavin kumar
17 August 2021, 3:57 pm
Quick Share

மதுரை: மதுரையில் மின்வாரிய அலுவலகம் முன்பு ஒப்பந்த பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி நூற்றுக்கணக்கானோர் மின்வாரியம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணிநிரந்தரம் செய்திட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வேலைப்பளு ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்ட ரூபாய் 350 ஐ வாரியமே நேரடியாக வழங்க வேண்டும், தானே புயல், வர்தா புயல் ஒக்கி புயல், கஜா புயல் போன்ற பேரழிவிற்கு ஒப்பந்த தொழிலாளர்களை பயன்படுத்திவிட்டு இப்பொழுது வாரியத்தில் ஒப்பந்த பணியாளர்கள் இல்லை என்று அறிக்கை அனுப்பும் நயவஞ்சக போக்கை கைவிட வேண்டும்,

வாரியத்தில் காலியாக உள்ள 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட களப்பணி காலிப் பணியிடங்களை ஒப்பந்த பணியாளர்களை கொண்டு நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மதுரையில் மின்வாரிய அலுவலகம் முன்பு சிஐடியு சங்கம் மற்றும் அதன் இணைப்பு சங்கங்கள் மூலம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட பொருளாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Views: - 169

0

0