பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Author: kavin kumar
25 October 2021, 4:52 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 50 க்கு மேற்பட்ட ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் சட்டமன்றம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநில ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக்கோரி சம்பா கோவிலில் இருந்து 50 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஊர்வலமாக வந்தனர். அப்போது சட்டசபை அருகே தடுப்புகளை போட்டு போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அமைப்புசாரா சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு தீபாவளி பண்டிகை காலங்களில் வழங்கி வந்த உதவி தொகையை ரூ.5000-மாக உயர்த்தி வழங்கிட வேண்டும்,அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரிய கூடிய அனைவருக்கும் தீபாவளிக்கு வழங்கப்படும் போனஸ் உச்சவரம்பை உயர்த்தி வழங்கிட வேண்டும், அரசு சார்பு நிறுவனங்களில் பணி பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு உடனடியா நிலுவையில் உள்ள சம்பளம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தீபாவளிக்கு முன்னதாக அரசு நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்தி கண்டன முழுக்கங்களை எழுப்பினர்.

Views: - 198

0

0