பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித் துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

28 October 2020, 6:24 pm
Quick Share

நீலகிரி: தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் உதகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் 35 ஊராட்சிகளில் சுமார் 370 குடிநீர் பம்ப் ஆபரேட்டர்கள் மற்றும் 105 துப்புரவு பணியாளர்கள் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த இருபது முப்பது ஆண்டுகாலமாக பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு இதுவரை அரசு பணியாளர்களுக்கு வழங்கும் சலுகைகள் ஏதும் வழங்கப்படவில்லை. பணி நிரந்தரம் ஊதிய உயர்வு பதவி உயர்வு வழங்கப்படவில்லை ஓய்வு பெற்றபின் ஓய்வுகால பலன்களாக கிராஜுவிட்டி ஓய்வு ஊதியம் இன்று வரை கிடைக்கவில்லை.

மேலும் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேரூராட்சி நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குடி நீர் பம்ப் ஆபரேட்டர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அரசாணை எண் 62 இன்படி குறைந்தபட்ச ஊதியம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் நீலகிரி மாவட்டத்திலும் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைவர் போஜராஜ் பொது செயலாளர் ரகுநாதன் பொருளாளர் ரவிச்சந்திரன் உட்பட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பம்ப் ஆபரேட்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 17

0

0