பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Author: Udhayakumar Raman
29 June 2021, 4:31 pm
Quick Share

திருச்சி: மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தற்போது தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு 100- தாண்டி வரலாறு காணாத அளவில் உயர்த்திய மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கை கண்டித்து திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே திருச்சி விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த பொதுமக்களுக்கு 7,500 நிவாரணத் தொகை மற்றும் 10 கிலோ உணவு தானியம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கிட கோரியும், கொரோனா தடுப்பூசி தடையின்றி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கவும்,

மேலும் செங்கல்பட்டில் தடுப்பு ஊசி தயாரிக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையை திருச்சி மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அருள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் திராவிடமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் வழங்கினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 175

0

0