கால்வாய்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Author: kavin kumar
18 October 2021, 3:59 pm
Quick Share

திருவள்ளூர்: பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர்நிலை மழைநீர் கால்வாய்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நீர்நிலை மற்றும் ஓடை கால்வாய் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வட்டாரவளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடபெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள நீர்நிலை மழைநீர் கால்வாய்ஓடை உள்ளிட்டவைகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாததை கண்டித்து
மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நீர்நிலை மற்றும் ஓடை கால்வாய் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கண்டனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை மீஞ்சூர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என தடுத்து நிறுத்தினர்.அதனை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் கோரிக்கை மனு அளிக்க சென்ற நிலையில் அதிகாரிகள் யாரும் அங்கு இருக்கையில் இல்லாதததால் மனுவை வாங்கவும் யாரும்முன் வராததால் அங்கேயே அமர்ந்து மீண்டும் போராட்டம்நடத்தியதை தொடர்ந்து பின்னர் அங்கு உடனடியாக வந்த அதிகாரிகள் மனுவை பெற்று கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தைதொடர்ந்துஅங்கிருந்து சென்றனர்

Views: - 139

0

0