புதிய கல்விக் கொள்கையை கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

3 August 2020, 7:24 pm
Quick Share

புதுச்சேரி: கட்டாய சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும், கல்வியை காவி மயமாக்கும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து புதுச்சேரியில் திராவிடர் விடுதலை கழகம் மற்றும் சமூக ஜனநாயக இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டாய சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும், கல்வியை காவி மயமாக்கும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையையும், நவீன குலக்கல்வித் திட்டத்தை புதுச்சேரி அரசு நடைமுறைப்படுத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் விடுதலை கழக லோகு.அயப்பன் தலைமை தாங்கினார். இதில் ஏரளாமான சமூக ஜனநாயக இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கையை கண்டித்தும், பாஜக அரசுக்கு எதிராகவும், புதுச்சேரியில் இதை நடைமுறைப்படுத்த கூடாது என கோரி கோஷங்களை எழுப்பினர்..

Views: - 12

0

0