ஆலயங்களை திறக்க கோரி இந்து முன்னணியினர் நூதன முறையில் வழிபாடு செய்து ஆர்ப்பாட்டம்

25 June 2021, 1:31 pm
Quick Share

வேலூர்: வேலூரில் தமிழகத்தில் உள்ள ஆலயங்களை மக்கள் வழிபாட்டிற்காக திறக்க கோரி ஆலய வாசலில் கற்பூரம் ஏற்றி இந்து முன்னணியினர் நூதன முறையில் வழிபாடு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம், வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள செல்லிய்யம்மன் ஆலயம் அருகில் இந்து முன்னணியின் சார்பில் மாவட்ட பொருளாளர் பாஸ்கர் தலைமையில் இந்து ஆலயங்கள் அனைத்தையும் மக்கள் வழிபாட்டிற்காக திறக்க கோரியும், டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டு மதுகடைகளை மூட கோரியும், அனைத்து ஆலயங்களையும் தமிழக அரசு மக்கள் பயன்பாட்டிற்காக திறக்க வலியுறுத்தி ஆலய வாசல் அருகில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து நூதன முறையில் கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 357

0

0