தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம்

Author: kavin kumar
26 October 2021, 4:58 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த கோயில் நகைகளை உருக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட கோரிக்கை தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சக்திவேல் அவர்களின் தலைமையில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிடக் கோரி தமிழக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்முகலாயர்கள் வெள்ளையர்கள் ஆட்சிகளின் போது கோயில்கள் மீது நடந்த தாக்குதல் மிஞ்சும் வகையில் நாத்திக தமிழக அரசு தொடர்ந்து தாக்குதல் செய்து வருவதை வன்மையாக எதிர்ப்பதாகவும், அதேபோல் கோயில் பூஜைகள் பாரம்பரியம் இவற்றில் தலையிட அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்று சட்டமும் நீதிமன்றமும் கூறும் நிலையில் அவற்றை மதிக்காமல் அவர்களின் உணர்வு களுக்கு எதிரான செயல்களை செய்கிறார்கள் என்று தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 96

0

0