மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுவன் பலி…

22 January 2021, 7:09 pm
Quick Share

மதுரை: மதுரையில் டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுவன் பலியான சம்பவ அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் டெங்கு பரவல் அதிகமாக இருக்கும் முறை துவக்கத்தில் சற்று மெதுவாக பரவியது. அக்டோபரில் 6 பேருக்கும் நவம்பரில் 14 பாதிக்கப்பட்டனர். டிசம்பரில் பரவல் வேகமானது. இந்த மாதத்தில் மட்டும் 45 பேர் டெங்கு தாக்கியது. இந்த மாதம் டெங்குவின் வேகம் அதிகரித்துள்ளது. முதல் 20 நாட்கள் மட்டும் 45 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களிலும் பாதிப்பு அதிகரிக்கலாம். பிப்ரவரி மார்ச் வரை நடைபெற இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் மதுரை எஸ் ஆலங்குளம் பகுதியில் வசித்து வரும் சத்தியபிரியா மூத்த மகன் மிருத்தின் ஜெயன் இரண்டாவது திருமலையஸ் இருவருக்கும் டெங்கு காய்சல் ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வயது 9 வயது மிருத்தின் ஜெயன் எனபவரையும் இரண்டாவது மகன் திருமலையஸ் என்பவரையும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருமலையஸ் உயிரிழந்துள்ளார். ஒரே குடும்பத்தில் இரு சிறுவர்கள் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு 7 வயது சிறுவன் உயிர் பலியானது அப்பகுதி மக்கள் இடத்திலும் குடும்பத்தினரும் சோகத்தில் உள்ளனர்.

Views: - 0

0

0