அத்தி வரதர் வைபவ ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்து இந்து சமய அறநிலையத் துறையினர் தணிக்கை

4 March 2021, 8:10 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைபவ ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்து இந்து சமய அறநிலையத் துறையினர் ஆவணங்களை தணிக்கை செய்து விசாரணை மேற்கொண்டனர்.

உலக பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவிலில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை அத்தி வரதர் வைபவம் நடைபெற்றது. இதில் 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அத்தி வரதர் வைபவத்தின் போது விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டில் முறைகேடு நடைபெற்றதாக குறித்து RTI மூலமாக தகவல் பெறப்பட்டதில் சரியான முறையில் தகவல் தெரிவிக்கப்படவில்லை என புகார்கள் எழுந்தன.மேலும் இதனால் டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் , இது குறித்து அறிவிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டதன் பேரில், முதற்கட்டமாக திருவேற்காடு இணை ஆணையர் லக்‌ஷ்மனன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஆன்லைன் டிக்கெட் மூலம் விற்கப்பட்ட டிக்கெட் குறித்து வைத்துள்ள ஆவணங்களை சரிபார்த்து தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக இணை ஆணையர் தலைமையில் 3 நபர்கள் கொண்ட குழுவினர் கோவிலின் செயல் அலுவலர் அலுவலகத்தில் ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்து வைத்துள்ள கணக்கு பதிவேடுகளில் உள்ள பதிவேடுகளை தணிக்கை செய்தும்,

வரதராஜப்பெருமாள் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன்,இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (பொறுப்பு) ஜெயா உள்ளிட்டோரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் உத்திரவின் பேரிலே இப்பணியானது தற்போது நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 3

0

0