உதகையில் இரவிலும் ஒளிரும் பிரதிபலிப்பு பெயர்ப்பலகைகள் வைப்பு

29 October 2020, 1:13 pm
Quick Share

நீலகிரி: உதகையில் தேசிய நெடுஞ்சாலை மூலம் இரவிலும் ஒளிரும் பிரதிபலிப்பு பெயர்ப்பலகைகள் அனைத்துப் பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தளங்களை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இம் மாவட்டத்திற்கு வருகை புரிகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு பகுதிகளிலும் சுற்றுலாப்பயணிகள் சுலபமாக சென்று வர ஆங்காங்கே சுற்றுலா தளங்களின் பெயர்கள் பொறித்த பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த முறை தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் இரவிலும் பளீரென தெரியும் வகையில் புதுவிதமான ஒளிரூட்டும் பிரதிபலிப்பு பெயர்ப்பலகைகள் சுற்றுலா தலங்களின் புகைப்படங்களோடு முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டுள்ளன. உதகை , குன்னூர், கோத்தகிரி, கூடலூர், முதுமலை புலிகள் காப்பகம் செல்லும் முக்கிய சாலைகளின் ஓரம் இந்த ஒளிரூட்டும் பிரதிபலிப்பு பெயர்ப்பலகைகள் கண் கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளன.

Views: - 10

0

0