முக கவசம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த துணை முதல்வர்…

25 August 2020, 8:14 pm
Quick Share

தேனி: தேனியில் குடும்ப அட்டைதார்களுக்கு முக கவசம் வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

உலகெங்கும் கொரோனா வரமால் இருப்பதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே கொரனோ வரமாலும், மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்கு முக கவசம் அணிய வேண்டும் என அரசு வழியுறுத்தி வருகிறது. இதனால் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முககவசம் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவித்தது. இதனையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு முக கவசம் வழங்கும் திட்டத்தினை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார்.

மேலும் தேனி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் பின்தங்கிய நிலையில் உள்ள 400 முஸ்லிம் மக்களை தேர்வு செய்து சிறு, குறு தொழில் செய்ய தால 7 500 வீதம் 30 லட்சம் நிதி வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் மற்றும் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலர் நிறைமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.