அரிவாள் தயாரிப்பவர்களுடன் காவல்துறை துணை ஆணையர் ஆலோசனை…

Author: kavin kumar
29 September 2021, 5:28 pm
Quick Share

திருச்சி: திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் அறிவுரைகளின் பேரில் திருச்சி மாநகரத்தில் காவல்துறையினர் ஆயுதம் தயாரிப்பு பட்டறை வைத்து நடத்தும் உரிமையாளர்களிடம் ஆலோசனை நடத்தினர்.

திருச்சி மாநகரத்தில் காவல்துறையினர் ஆயுதம் தயாரிப்பு பட்டறை வைத்து நடத்தும் உரிமையாளர்களிடம் ஆலோசனை நடத்தினர். திருச்சியில் 6 இடங்களில் மொத்தம் 118 நபர்களை வைத்து ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் திருச்சி மாநகர துணை ஆணையர் சக்திவேல் கலந்துகொண்டு வழிப்புணர்வு குறித்தும், குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்தும் ஆட்டோ ஓட்டுநர்களை ஒருங்கிணைப்பு செய்து 28 இடங்களில்
மொத்தம் 375 நபர்களை வைத்து ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் இனி வருங்காலங்களில் குற்றச்சம்பவங்களை முன்கூட்டியே தடுக்க வேண்டும். எவரேனும் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை புதியதாக வாங்கவோ அல்லது செய்ய சொல்லவோ அல்லது புதுப்பிக்கவோ ஆயுத தயாரிப்பு பட்டறைக்கு வரும் நபர்களின் உண்மையான முகவரி மற்றும் செல்போன் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவேட்டில் பதிவு செய்த பிறகே ஆயுதங்களை வழங்கவேண்டும். கண்டிப்பாக சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட வேண்டும்.

மேலும் குற்ற சம்பவங்கள் குறித்து ஆட்டோ ஓட்டுனர்கள் முன்கூட்டியே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க ஒத்துழைப்பு தரவேண்டும். அவ்வாறு தகவல் தருபவர்களின் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார் என்று திருச்சி துணை துணை ஆணையர் தெரிவித்தார்.

Views: - 169

0

0