மா பயிர்கள்சாகுபடியை பார்வையிட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்

24 October 2020, 12:15 am
Quick Share

தருமபுரி: நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் சொட்டுநீர் பாசன மற்றும் நிழல்வலைக்கூடம் அமைத்து மலர்கள் மா பயிர்கள்சாகுபடி செய்வதை தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மாலனி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

  தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட மானியதஅள்ளி, அதியமான்கோட்டை ஆகிய கிராமங்களில் சொட்டுநீர் பாசன மற்றும் நிழல்வலைக்கூடம் அமைத்து மலர்கள், மா பயிர்கள் சாகுபடி செய்வதை தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி.மாலனி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை தருமபுரி மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம் சார்பில் 2020-21- ஆம் நிதி ஆண்டிற்கு வீரிய காய்கறி, மா நெருக்கி நடவு, உதிரி மலர்கள் பரப்பு விரிவாக்கம், கிழங்கு வகை பயிர் சாகுபடி, தேனி வளர்ப்பு, பசுமைக்குடில் அமைத்தல், 

நிழல்வலைக்கூடம் அமைத்தல், இயந்திமயமாக்கல், அறுவடைக்குப்பின் தொழில்நுட்பமான சிப்பம் கட்டும் அறை, வெங்காய சேமிப்பு கிடங்கு மற்றும் நடமாடும் காய்கறி விற்பனை வண்டி உள்ளிட்டவைக்கு ரூபாய் 5 கோடியே 09 லட்சத்து 39 ஆயிரம் ஒதுக்கீடு செய்யபட்டு 8 வட்டாரங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. உழவன் செயலி முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதேபோல் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் 2020-21 ஆம் நிதி ஆண்டிற்கு தோட்டக்கலைப் பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க 14400 எக்டர் பரப்பிற்கு ரூபாய் 100 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தோட்டக்கலைப் பயிர;களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க தருமபுரி மாவட்ட அனைத்து வட்டாரங்களுக்கும் பிரித்தளிக்கப்பட்டு 4500 எக்டர் பரப்பிற்கு ரூ. 45 கோடி மதிப்பிற்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை சார்பில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் சாகுபடியினை ஊக்குவிக்க பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் மூலம் பயன்பெற விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

Views: - 18

0

0