லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கைது!

Author: kavin kumar
12 October 2021, 3:33 pm
Quick Share

தஞ்சாவூர்: காலி மனையை வரன்முறைப்படுத்திய சான்றிதழ் வழங்க மனுதாரரிடம் ரூ.9,000 லஞ்சம் வாங்கிய தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலுகத்தில் பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை (னுநிரவல டீனுழு) லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை ராஜராஜன் நகரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஆனந்தன். இவரது பெயில் உள்ள ஒரு காலிமனை, இவரது தாயார் பெயரில் உள்ள இரண்டு காலி மனைகள் என மொத்தம் 3 காலி மனைகளுக்கு வரன்முறைப்படுத்தி சான்றிதழ் வழங்குமாறு தஞ்சாவூர் பனகல் கட்டடத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அவ்வலுவகத்தைச் சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் என்பவர் மேற்படி சான்றிதழ் வழங்க காலி மனை ஒன்றுக்கு தலா ரூ.3,000 வீதம் 3 காலி மனைகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.9,000 லஞ்சமாகக் கேட்டுள்ளார். அதோடு, லஞ்சப் பணத்தை மாலையில் அலுவலக நேரம் முடிந்த பின்னர் கொண்டு வந்து தருமாறு கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தன் இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, இன்று மாலை 7.30 மணியளவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்று அங்கே காத்திருந்த துணை வட்டார வளர்ச்சி அலுவர் சாமிநாதனிடம் ரூ.9,000ஐ கொடுத்தார். அதை சாமிநாதன் பெற்றுக்கொண்டபோது அங்கே மறைந்திருந்த டிஎஸ்பி ராஜு தலைமையிலான லஞ்ச ஓழிப்புத்துறை அதிகாரிகள் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை கையும் களவுமாகப் பிடித்து லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், சாமிநாதனின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 239

0

0