தமிழ்நாட்டிலும் விளையும் பாலைவன பயிரான பேரீச்சை: சாகுபடி செய்து அசத்தி வரும் தருமபுரி விவசாயி

21 June 2021, 7:32 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி அடுத்த காரிமங்கலத்தில் பாலைவன பயிரான பேரீச்சையை விவசாயி சாகுபடி செய்து அசத்தி வருகிறார்.

ஈராக்,சவுதிஅரேபியா போன்ற பாலைவான நாடுகளில் விளையும் பேரீச்சை தர்மபுரி மாவட்டத்தில் அரியகுளம், அரூர், காரிமங்கலம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் பரவலாக சாகுபடி செய்து வருகின்றனர். இதேபோல் காரிமங்கலத்தில், வேல்முருகன் என்பவர் போக்குவரத்து துறையில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தார். விவசாயத்தில் ஆர்வம் இருந்ததால், அப்பணியலிருந்து அவர் விருப்பு ஓய்வு பெற்று, விவசாயம் செய்து வருகிறார்.
இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அரியாகுளம் பகுதியில் உள்ள நிஜாமுதீன் என்பவரிடம், 90 திசு வளர்ப்பு பேரீச்சை நாற்றுகளை வாங்கி வந்து அவருக்கு சொந்தமான ஒன்றை ஏக்கர் நிலத்தில் பயிரிட்டு சொட்டு நீர் மூலம் சாகுபடி செய்து வந்தார். மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது, தரைமட்டத்திலிருந்து 2 அடி உயரத்தில் பேரீச்சை செடியில் கொத்து கொத்தாக பேரீச்சை காய்த்து அறுவடைக்கு தயாரக உள்ளது.

இவர் பயிரிட்டுள்ள ஏழு வகையான பேரீச்சையில், இந்தாண்டு முதல் அறுவடை செய்ய உள்ளார். ஒரு மரத்தில், 200 முதல், 300 கிலோ வரை காய்த்துள்ளது. முதல் மகசூலில் எட்டு டன் வரை விளைந்துள்ளதால், இதனை உள்ளூர் வியபாரிகள் மற்றும் வெளியூர் வியபாரிகள் ஆர்வமாக வந்து வாங்கி சென்று வெளி மார்கெட்டில் ஒரு கிலோ பேரீச்சை, 350 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். பாலைவனத்தில் வளரக்கூடிய பேரீச்சை சாகுபடியை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ஆர்வமாக செய்து வருகின்றனர். ஏற்கெனவே வானம் பார்த்த பூமியாக உள்ள தர்மபுரி மாவட்டத்தில், பேரீச்சை சாகுபடி செய்வதற்கு ஏற்றார் போல், மண்வளம் உள்ளதால், தோட்டக்கலைத்துறையினர் விவசாயிகளுக்கு மானியம் கொடுத்து பேரீச்சை விவசாயம் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 134

0

0