கல்வராயன் மலைக் கிராமத்தில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Author: kavin kumar
27 August 2021, 6:32 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலைப் பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த 1000 லிட்டர் சாரய ஊறலை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வாராயன் மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்படுவதாக மாவட்ட எஸ்.பி., ஜியாவுல் ஹக்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து, அவரது உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் நேற்று கல்வராயன் மலைப்பகுதிக்குட்பட்ட கொடமாத்தி, நாராயணப்பட்டி கிராம ஓடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின்போது, அங்குள்ள மரங்களின் மறைவிலும், பாறைகளின் இடுக்கிலும் பேரல்களில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் புளித்த சாராய ஊறல் இருப்பது தெரிய கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, சுமார் 1000 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்த மதுவிலக்கு பிரிவு போலீசார், அவற்றை தரையில் ஊற்றி அழித்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு சாராயம் காய்ச்சிய மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 184

0

0