சிறையில் படுகொலை செய்யப்பட்ட மாணவருக்கு நீதி கேட்டு தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபையினர் ஆர்ப்பாட்டம்

Author: Udhayakumar Raman
28 June 2021, 2:54 pm
Quick Share

மதுரை: சிறையில் படுகொலை செய்யப்பட்ட மாணவருக்கு நீதி கேட்டு மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டை நாங்குநேரி வாகைகுளத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் முத்துமணி களக்காடு காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்காக கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 14 நாட்கள் நீதிமன்ற காவல் விசாரணையில் இருந்த முத்து மனோ விசாரணை முடிந்து ஏப்ரல் 22 ஆம் தேதி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். அவரை சிறையில் அடைத்த சில மணி நேரங்களில் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள். காவலர்கள் உடந்தையுடன் சிறையில் இருந்த சிலர் முத்துமனோவை ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக விசாரணை கைதிகள் மீது வழக்கு பதிவு செய்தும், சிறைத்துறை அதிகாரிகள் கண்துடைப்பாக பணிநீக்கம் செய்துள்ளனர்.

சட்டக் கல்லூரி மாணவருக்கு நீதி கேட்டு படுகொலை செய்த குற்றவாளிகள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என கூறி கடந்த 68 நாட்களாக அப்பகுதியினர் இறந்த முத்து மனோ உடலை வாங்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட முத்து மனோவிற்கு நீதி கேட்டும், இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக் கோரியும் மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபை நிறுவனத்தலைவர் ராமர்பாண்டியர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, குடியுரிமை அட்டையை (ஆதார் கார்டு) ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 161

0

0