சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு அதிகாலை முதலே குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

Author: Udayaraman
14 October 2020, 2:20 pm
Quick Share

விருதுநகர்: பிரதோஷத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தரைமட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்.இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பெளர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது.

இந்நிலையில் பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வரும் 17 ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.இந்நிலையில் இன்று பிரதோஷம் என்பதால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Views: - 43

0

0