இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: மதுபானம் வாங்க சென்ற 3 பேர் பலி

17 June 2021, 9:27 pm
Quick Share

தருமபுரி: தொப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த குறித்து தொப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் அரசு மதுபான கடைகள் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கபட்டு இருந்தது. இதில் சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகளவில் இருப்பதால் அரசு மதுபான கடைகள் திறக்கபடாமல் இருப்பதால் அங்கு இருக்கும் மதுபிரியர்கள் தருமபுரி மாவட்டத்திற்கு மதுவாங்க தினந்தோறும் ஆயிரக்கனோர் மதுவாங்கி செல்ல படையெடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிருந்தும் தருமபுரி மாவட்டத்திற்கு மது வாங்க அதிகளவில் வருகின்றனர்.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசு மதுபானக் கடைக்கு சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்தவர்கள் 4 இருசக்கர வாகனங்களில் 7 பேர் கொண்ட குழு தருமபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் அரசு மதுபானக் கடையில் மது அருந்திவிட்டு, தேவையான அளவு மதுபாட்டில்களை வாங்கி சென்றுள்ளனர். மது அருந்திவிட்டு தொப்பூர் கணவாய் பகுதியில் இரு லாரிகளுக்கு நடுவே செல்லும் போது லாரி ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
இந்த விபத்தில் உயிரிழந்த சேலத்தை சேர்ந்த செல்வராஜ், சுவாமிநாதன், ஈஸ்வரன் ஆகிய 3 பேரின் உடலைகளை கைப்பற்றி தொப்பூர் காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து கோதுமை லோடு ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு தருமபுரி மாவட்டம் தொப்பூர் வழியாக கொண்டு செல்லும் போது ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதில் ஓட்டுனர்கள் ஜகதீஸ்வரன் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் பழத்த படுகாயமடைந்தனர். இவர்களையும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து தொப்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 134

0

0