அதிமுகவின் 50ஆவது ஆண்டு விழா: கேக் வெட்டி கொண்டாடிய முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்

Author: Udhayakumar Raman
17 October 2021, 3:31 pm
Quick Share

தருமபுரி:அதிமுகவின் 50ஆவது ஆண்டு விழாவையொட்டி தருமபுரி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாடினார்

எம்ஜிஆர் அவர்களால் துவங்கப்பட்ட அஇஅதிமுகவின் 50வது ஆண்டு விழாவை தமிழகம் முழுவதும் பொன்விழா ஆண்டாக கொண்டாட வேண்டும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்தது. அதற்கிணங்க தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட அவைத் தலைவர் தொ.மு.நாகராஜன் தலைமையில் முன்னாள் உயர் கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சரும், தருமபுரி அதிமுக மாவட்ட கழக செயலாளரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி அன்பழகன் 50வது ஆண்டை கொண்டாடும் விதமாக தருமபுரி அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைதொடர்ந்து 50 கிலோ கேக் வெட்டி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதே போன்று தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து பொது மக்களுக்கு அறுசுவை உணவுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், நகர செயலாளர் பூக்கடை ரவி மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Views: - 161

0

0