விவசாயிகளுக்கு விவசாய கடன் தள்ளுபடி: அதிமுகவினர் விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

5 February 2021, 4:59 pm
Quick Share

தருமபுரி: தமிழக அரசு விவசாயிகளுக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யபட்டதற்கு தருமபுரி பூ சந்தையில் அதிமுகவினர் விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். .

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழக சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் 12 ஆயிரத்து 110 கோடி மதிப்பிலான விவசாய பயிர் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். பயிர் கடன் தள்ளுபடியால் தமிழகத்தில் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து தருமபுரி நகரப்பகுதியில் அமைந்துள்ள பூக்கள் சந்தையில் தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து விவசாயிகளுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0