மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: அனைத்து கோரிக்கைகளைக்கும் பரிசீலித்து உரிய நடவடிக்கை: ஆட்சியர் உறுதி

Author: kavin kumar
28 August 2021, 3:55 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில் நடைபெற்ற மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காணொளி காட்சி மூலம் விவசாயிகளிடம் பேசும் போது தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 866.2மி.மீ மழையளவு பெறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தற்போது வரை 468.6மி.மீ மழையளவு பெறப்பட்டுள்ளது. நடப்பு காரீப் பருவத்தில் 66956 ஹெக்டேர் பரப்பில் வேளாண்மைப் பயிர்கள் மற்றும் 47834 ஹெக்டர் பரப்பில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மை பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு 175.8 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் நிலக்கடலை சான்று விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சான்று விதைகள் 232.95 மெட்ரிக் டன் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு விவசாயிகளின் நலனிற்காகவும், விவசாயத்தை மேம்படுத்துவதற்கும், விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்வதை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை விவசாய பெருங்குடி மக்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இக்கூட்டத்தில் விவசாய பெருமக்கள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் கனிவுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி, தெரிவித்தார். கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டஆட்சியர் திவ்யதர்சினி, தலைமையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காணொளி காட்சி மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

Views: - 186

0

0