சசிகலா பூரண நலம் பெற வேண்டி அமமுகவினர் சிறப்பு வழிபாடு

24 January 2021, 6:39 pm
Quick Share

தருமபுரி: அரூரில் கொரோனா பாதிக்கப்பட்ட சசிகலா பூரண நலம் பெற வேண்டிஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் பழனியப்பன் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பெங்களூர் சிறையில் இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரும் 27 ஆம் தேதி விடுதலையாகும் நிலையில் அவர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். அவர் பூரணம் குணமடைந்து வரும் 27 ஆம் தேதி நலமுடன் விடுதலையாக வேண்டும் என தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயிலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில துணை பொதுசெயலாளர் பழனியப்பன் தலைமையில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் அரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ஆர். முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.