பாரத மாதா கோவிலில் அர்ஜுன் சம்பத் வழிபாடு

Author: kavin kumar
11 August 2021, 8:38 pm
Quick Share

தருமபுரி: பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணி சிவா நினைவிடம் அருகே உள்ள பாரத மாதா கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பூஜை செய்து வழிபாடு செய்தார்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடம் அருகே 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பாரத மாதா நினைவாலயம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திறக்கப்பட்டது. நினைவாலயம் என பெயர் வைத்தர்க்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தும் அக்கோயில் அகமவிதிப்படி கோவிலில் பூஜை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தவர். இந்நிலையில்இ இன்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பாரத மாதா நினைவாலயத்திற்க்கு நேரில் வந்து பூஜை செய்து மாலை அணிவித்து கற்பூரம் ஏற்றி வழிபட்டார். இதற்கு அப்பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துசென்றனர்.

அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அர்ஜூன் சம்பந்த், தியாகி சுப்ரமணிய சுவாமி நீண்ட நாள் கனவு இங்கு பாரத மாதா கோவில் அமைக்க வேண்டும் என்பது தவிர நினைவாலயம் அல்ல. அதனால் யார் செய்திருந்தாலும் அதனை மாற்ற வேண்டும். சுப்பிரமணிய சிவா இந்த பகுதியை விலைக்கு வாங்கியும் இப்பகுதி மக்கள் தானமாக கொடுத்தும் இப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இது அண்ணா அறிவாலயமோ அல்லது பாலன் நினைவாலயமோ கிடையாது. இது பாரத மாதா கோவில் அனைவருக்கும் வருவதற்கு வழிபடுவதற்கும் உரிமை உண்டு என்று தெரிவித்தார்.

Views: - 277

0

0