அனைத்து வகையான வங்கி பண பரிவர்த்தனைகளுக்கு ஒரு ஏடிஎம்: தருமபுரியில் முதன்முறையாக அறிமுகம்…

31 August 2020, 4:39 pm
Quick Share

தருமபுரி: அனைத்து வகையான வங்கி பண பரிவர்த்தனைகளை ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் பயன்படுத்தும் வகையில் இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் உள்ள அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஊரக மற்றும் விவசாய மேம்பாட்டு சங்கம் (Rural and Agriculture Farmers Development Society) சார்பில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த ATM-CDM இயந்திரத்தில் 204 அரசு மற்றும் தனியார் வங்கிகளின் பணப்பரிமாற்றம், பணம் சேமிப்பு, பணம் எடுத்தல் உள்ளிட்ட பயன்பாடுகள் அனைத்தும் ஒரே ஏடிஎம் மிஷினில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் இன்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் தொடுதிரை மூலம் எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் உள்ளது.

இந்த இயந்திரத்தில் AEPS மூலம் பணம் பெற்றுக் கொள்ளும் வசதி, ஓய்வு ஊதிய பணம் எடுத்தல், தொலைபேசி கட்டணம், மின்சாரக் கட்டணம் போன்ற அனைத்து சேவைகளும் கொண்ட ஒரே இயந்திரத்தை GOOD WELL ACADEMY நிறுவனத்தைச் சேர்ந்த சரண்குமார் மற்றும் சதாம் உசேன், ஆனந்த சேகர் மூலம் தொடங்கப்பட்டது. RAFDS தலைவர் சந்திர போஸ் வேதாச்சலம் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர் நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற இயந்திரத்தை தொடங்கப்படும் என தகவல் தெரிவித்தனர்.

Views: - 0

0

0