30 சதவீத பேருந்து போக்குவரத்து தொடங்கியது

1 September 2020, 3:05 pm
Quick Share

தருமபுரி: பொதுமுடக்க தளவுர்களால் தருமபுரியில் இன்று 30 சதவீத பேருந்து போக்குவரத்து தொடங்கியது.

கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு நடவடிக்கையின் காரணமாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் வழங்கி செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மாவட்டத்திற்குள் பேருந்துகள் இயக்க தமிழக அனுமதி அளித்தது. தொடர்ந்து இன்று தருமபுரி நகரப் பேருந்து நிலையம், புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் போக்குவரத்து தொடங்கியது. இதில் தருமபுரி போக்குவரத்து மண்டலத்தில் உள்ள 850 பேருந்துகளில் காலை நிலவரப்படி 30 சதவீதம், 160 பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. பொது மக்களின் வரவேற்புக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று தொடங்கிய பேருந்து போக்குவரத்து தருமபுரி மாவட்டத்தில் மட்டும் இயக்கப்படும் என்றும், மாவட்ட எல்லையான தொப்பூர் இருமத்தூர், காடு செட்டிபட்டி, அனுமந்தீர்த்தம் என மாவட்ட எல்லை வரை பேருந்து போக்குவரத்து இயக்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் வருகை இல்லாததால், பேருந்துகள் காலியாகவே இயங்கியது. மேலும் பேருந்து நிலையம் முழுவதும் தருமபுரி நகராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர். அரசு அறுவுறுத்தியபடி பேருந்து பயணத்தில் முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றப்படுகிறது. இதுவரை தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0