பொதுமக்களுக்கு கொரேனா விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கிய வருவாய் துறை

Author: Udhayakumar Raman
2 August 2021, 3:57 pm
Quick Share

தருமபுரி: அரூர் பேருந்து நிலையத்தில் கொரானா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வருவாய் துறையினர் வழங்கினார்.

தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பொதுமக்களுக்கு கொரேனா மூன்றாவது அலையை தடுக்கும் வகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியும் துண்டு பிரசுரத்தை வருவாய் துறையினர் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதர துறை மற்றும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் கள பணியாளர்கள் கலந்துக்கொண்டு பேருந்து நிலையத்தில் இருந்த பேருந்து பயணிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் முகத்தில் முககவசம் அணியாமல் இருந்த நபர்களுக்கு அறிவுரை வழங்கி முகத்தில் முககவசம் அணிய வேண்டும் என சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தார்.

Views: - 135

0

0