தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மலை கிராம மக்களுக்கு நிவராண பொருட்கள் வழங்கல்

19 June 2021, 3:29 pm
Quick Share

தருமபுரி: வத்தல்மலை பகுதியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மலை கிராம மக்களுக்கு நிவராண பொருட்கள் வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனோ தொற்று காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் வருவாய் இன்றி தவிக்கும் குடும்பங்களுக்கு தமிழக அரசும், பல்வேறு தொண்டு நிருவனங்களும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அதனடிப்படையில் வத்தல்மலை பகுதியில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், கூலி வேலை செய்தவர்கள் என பலரும் பாதிப்படைந்தனர்.

இந்நிலையில் இரண்டாம் அலையின் தாக்கமும் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது. இதேபோல் வத்தல்மலையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அங்குள்ள சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள்.

Views: - 181

0

0