திமுக வேட்பாளர் 2 வது நாளாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

Author: Udhayakumar Raman
21 March 2021, 7:57 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தடங்கம் சுப்ரமணி 2 வது நாளாக இன்று 32 வது வார்டு மற்றும் 33 வது வார்டுகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

வருகிற 6 ந் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில் தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடும் தடங்கம் சுப்ரமணி தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதனையடுத்து 2 வது நாளாக இன்று தருமபுரி நகராட்சிக்குட்பட்ட 32 வது வார்டு மற்றும் 33 வது வார்டுகளில் அன்னசாகரம், எஸ்.வி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தை மேற்க்கொண்டார். மேலும் அப்பகுதியில் உள்ள நெசவாளர்ளை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது கடந்த அதிமுக ஆட்சியில் நெசவாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானது அனைவருக்கும் தெரியும். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் உங்களின் வேட்பாளராக தான் போட்டியிடுகிறேன். தன்னை வெற்றி பெற செய்தால் உங்கடைய அனைத்து பிரச்சனைகளையும் முன்னின்று தீரத்து வைப்பேன் என்று கூறினார். மேலும் அவருடன் வந்த திமுகவினர் திமுகவின் தேர்தல அறிக்கையை பொது மக்களிடன் கொடுத்து உதயசூரியன் சின்னத்தின் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டனர். இந்தபிரச்சாரத்தின் போது நகர பொருப்பாhளர் அன்பழகன், நகர பொறுப்புகுழு உறுப்பினர் முல்லைவேந்தன், வெல்டிங் ராஜா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 37

0

0