கொரோனோ நிவாரண நிதி வழங்க கோரி கிராமிய நாடக கலைஞர்கள் கோரிக்கை மனு

Author: Udhayakumar Raman
25 June 2021, 5:28 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனோ நிவாரண நிதி வழங்க கோரி கிராமிய நாடக கலைஞர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனோ தாக்கத்தின் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இரவு நேரங்களில் ஊரடங்கு நீடித்து வருகிறது. இதனால் கோவில்கள் விழாக்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கிராமிய நாடக கலைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 12 நாடக கலைக்குழுக்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வரும் நிலையில்,

தற்போது கோவில் விழாக்கள் இல்லாத நிலையில் பொருளதார ரீதியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தமிழக அரசு நாடக கலைஞர்கள் குழுக்கள் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் நிவராண தொகையாகவும், மேலும் மாதம் நிவாரண நிதி ஒதுக்கிடு செய்து வழங்க வேண்டும், தமிழக அரசு கொரோனோ விழிப்புணர்வுக்கு எங்களை பயன்படுத்தினால் நாங்களும் பொருளதார ரீதியாக பயன்பெறுவோம் என கிராமிய கலைஞர்கள் இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

Views: - 207

0

0