முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசிய போலி விஞ்ஞானி கைது

Author: Udayaraman
8 October 2020, 11:42 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில், தமிழக முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகளை தரக்குறைவாக பேசிய போலி விஞ்ஞானி ஜெயபாண்டியனை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி பிடமனேரி பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டியன் என்பவர் தான் விஞ்ஞானி என்றும், அவர் புதிய வாக்கு பதிவு இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளதாகவும், இதற்கு அரசு அதிகாரிகள் அங்கிகாரம் வழங்கவில்லை என தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளையும், பிரதமர் மற்றும் தமிழக முதல்வரையும் தரக்குறைவாக பேசி சமூக வலையதலங்களில் வீடியேவை அடுத்தடுத்து தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

இதே போல் இவர் தயாரித்த இயந்திரத்தை செய்தியாக செய்தியாளர்கள் வெளியிடவில்லை என செய்தியாளர்களையும் தரக்குறைவாக பேசி வந்தார். இவர் பரப்பிய அவதூர் வீடியோ தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து போலி விஞ்ஞானி ஜெயபாண்டியனை கைது செய்ய உத்திரவிட்டார். இதனையடுத்து தருமபுரி நகர காவல்துறையினர் ஜெயபாண்டியனை பெண்கள் வன்கொடுமை சட்டம்,ஐடி வழக்கு உள்ளிட்ட 8 வழக்கு பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டார்.

Views: - 28

0

0