இழப்பீடு வழங்காததை கண்டித்து கர்ப்பிணி மனைவியுடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

23 November 2020, 5:11 pm
Quick Share

தருமபுரி: உயர்மின் கோபுரம் அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்தியதற்கான இழப்பீடு வழங்காததை கண்டித்து கர்ப்பிணியான தனது மனைவி மற்றும் குழந்தையுடன் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.

தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள கோரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னசாமி இவரது விவசாய நிலத்தில் கடந்தாண்டு உயர்மின் கோபுரம் அமைக்க 1 அரை ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்தி உள்ளனர். இதற்கான உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பல முறை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளித்துள்ளார். ஆனால் இது வரை விவசாயி சின்னாமிக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை.

தனது விவசாய நிலத்தை பறிகொடுத்தது மட்டும் அல்லாமல் அதற்கான உரிய இழப்பீடும் கிடைக்கவில்லை என்கிற விரக்தியடைத்தியில் விவசாயி இன்று அவரது 7 மாத கர்ப்பிணி மனைவி மகேஸ்வரி மற்றும் 3 வயதுடைய குழந்தையுடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து அவர் மனைவி மற்றும் குழந்தை மீது ஊற்றி அவரது உடலிலும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொள்ள முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரிடமிருந்த மண்ணெண்ணை கேனையும் தீப்பெட்டியையும் பிடிங்கி உடல் மீது தண்ணீர் ஊற்றினர்.

இதனையடுத்து விவசாயி மற்றும் அவரது மனைவி, குழந்தையையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
விவசாய நிலத்தை பறிகொடுத்தது மட்டும் அல்லாமல் அதற்கான உரிய இழப்பீடும் கிடைக்கவில்லை என்கிற விரக்தியடைத்தியில் விவசாயி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 14

0

0