உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு: காலாவதியாகி கெட்டுபோன இறைச்சிகள் பறிமுதல்

Author: Udhayakumar Raman
22 September 2021, 1:27 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி நகர பகுதிகளில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு குழு சார்பாக தருமபுரி நகரப்பகுதிகளில் உள்ள பாஸ்ட்புட் கடை, உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகள் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து தருமபுரி நகரப்பகுதி மற்றும் இலக்கியம்பட்டியில் உள்ள துரித உணவகங்கள், ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பானுசுதா தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இன்று 15க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடைபெற்றது. இதில் சுமார் 50 கிலோ அளவில் காலாவதியாகி கெட்டுபோன இறைச்சிகளை பறிமுதல் செய்து 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. காலாவதியான பொருட்களை வைததிருந்த ஹோட்டல் உரிமையாளர்களுக்கு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு அலுவலர் மூலம் அறிவுரை வழங்கப்பட்டது. இந்த ஆய்வில் குமணன், நந்தகோபால், நாகராஜ் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Views: - 197

0

0