அரசு பள்ளிகளில்11 மற்றும் 12ம் வகுப்பு சேர்க்கை இன்று துவக்கம்… தனியார் பள்ளி மாணவிகள் அதிகளவில் ஆர்வமுடன் அரசு பள்ளியில் சேர்ப்பு

24 August 2020, 4:26 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில் அரசு பள்ளிகளில் நடைபெற்ற 11 மற்றும் 12ம் வகுப்பு சேர்க்கையில் தனியார் பள்ளி மாணவிகள் அதிகளவில் ஆர்வமுடன் அரசு பள்ளியில் சேர்ந்தனர்.

தமிழகத்தில் கொரோனோ தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. இந்நிலையில் கடந்த வாரம் 6 முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்புகான சேர்க்கை துவங்கியது.

தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் இன்று துவங்கிய சேர்க்கையில் பெரும்பாலான மாணவிகள் தனியார் பள்ளிகளிலிருந்து புதியதாக அரசு பள்ளிகளில் சேர்ந்தனர். தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் கல்வி தரம் நன்றாக உள்ளதாலும் தற்போதைய கொரோனோ ஊரடங்கினால் வருமானம் இழந்த பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் கேட்கும் கட்டணங்களை அளிக்க இயலாததாலும் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதாக தெரிவித்தனர்.

Views: - 34

0

0