கூட்டுறவு வங்கியின் தலைமையக கூடுதல் கட்டிடம் திறப்பு…

7 August 2020, 8:30 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையக கூடுதல் கட்டிடத்தை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடரில் விதி எண் 110ன் கீழ் 2019 – 2020 ஆம் ஆண்டிற்கு தமிழக முதல்வர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி இன்று தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் கூடுதல் கட்டிடத்தில் நிர்வாக அலுவலகம் மற்றும் இரண்டாம் தளத்தில் நிர்வாக குழு கூட்ட அரங்கிற்கு நவீன உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட கட்டிடத்தை ரூபாய் 30 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த உள்கட்டமைப்பு கட்டிடத்தை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் எஸ்.ஆர் வெற்றிவேல், மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 10

0

0