ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பாதுகாப்பு குறித்து வருவாய்துறையினர் ஆய்வு

Author: Udayaraman
6 October 2020, 5:59 pm
Quick Share

தருமபுரி: ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் முன் பாதுகாப்பு குறித்து வருவாய்துறையினர் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல், இங்குள்ள அருவிகள் உள்ளிட்ட இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் பரிசல் சவாரி செய்யவும் வெளி மாவட்டம் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் வந்து செல்வார்கள். சுற்றுலா பயணிகளை நம்பி ஒகேனக்கல்லில் மசாஜ் தொழிலாளர்கள், பரிசல் ஓட்டிகள், சமையல் செய்பவர்கள் மற்றும் மறைமுக தொழிலாளர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதரமாக இருந்து வந்தது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதங்களாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை விதித்திருந்தது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். இதனிடையே நேற்று ஒகேனக்கல்லின் மறு கரையில் உள்ள கர்நாடக மாநில எல்லைக்குட்பட்ட மாறுக்கொட்டாயில் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்ய அம்மாநில அரசு அனுமதியளித்ததையடுத்து நேற்றிலிருந்து கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் பரிசல் மூலம் ஒகேனக்கல்லுக்கு வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.

இதே போல் தமிழகத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என பரிசல் ஓட்டிகள்,மசாஜ் தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் மலர்விழி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளை அனுமதித்க்கப்பட்டால் அங்கு பாதுகாப்பாக இருக்குமா என வருவாய்துறையினருக்கு உத்திரவிட்டார்

அதன்பெயரில் இன்று வருவாய்துறையை சேர்ந்த அதிகாரிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து சுற்றுலா பயணிகள் குளிக்கும் அருவிகள், தொங்கு பாலம், நடைபாதை, பரிசல் இயக்கும் இடம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு பிறகு நாளை முதல் உள்ளூர் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருவதற்கு அனுமதியளிக்க உள்ளதாகவும்,

இதனை தொடர்ந்து வரும் 15 ஆம் தேதி முதல் 3 இடங்களில் சோதனை சாவடி அமைத்து அதன் மூலம் வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்த பின்னர் ஒகேனக்கல்லுக்கு அனுமதிக்கப்படும் எனவும், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க விதித்துள்ள தடை தொடர்ந்து நீடிப்பதாகவும், அதற்கு மாற்றாக முதலை பண்ணை எதிரே உள்ள காவிரி ஆற்றங்கரையோரம் மட்டும் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதியளிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 52

0

0