ஒகேனக்கல் நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக உயர்வு…

2 September 2020, 4:48 pm
Quick Share

தருமபுரி: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு 5 ஆயிரம் கன அடியாக வந்துகொண்டிருந்த நீர்வரத்து 16 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி மற்றும் பிலிகுண்டு, நாற்றம்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து திடீரென உயர்ந்தது.கர்நாடக கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 5309 கனஅடி நீரும் கபினி அணையில் இருந்து 1,500 கன தீரும் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழைநீர் மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் காரணமாகஒகேனக்கல்லுக்கு இன்று மதியம் நிலவரப்படி 5 ஆயிரம் கன அடியாக வந்துகொண்டிருந்த நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி நீர் உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் செந்திறத்தில் ஆர்பரித்துக்கொட்டுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக் துவங்கி உள்ளது.

Views: - 5

0

0