ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

18 July 2021, 6:52 pm
Quick Share

தருமபுரி: தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு இன்று மாலை வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் வந்துக்கொண்டிருப்பதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கேரளா மற்றும் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி தமிழகத்திற்கு செல்லும் காவிரி ஆற்றில் இரு அணைகளிலிருந்தும் கடந்த சில தினங்களாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளது.

இன்று தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு இன்று காலை வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக வந்துக்கொண்டிருந்த நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக நீர் வந்துக்கொண்டிருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்துக்கொட்டுகிறது.

Views: - 106

0

0