ஒகேனக்கலில் ஆடி பெருக்கில் வெறிச்சோடி காணப்பட்ட காவேரி ஆறு

2 August 2020, 3:15 pm
Quick Share

தருமபுரி: ஆடி 18ம் நாளில் பல ஆயிரம் போத் புனித நீராடிய காவேரி ஆற்றில் தற்போது ஒருவர் கூட இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவேரி தமிழக எல்லையான தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக தான் தமிழகத்திற்கு நுழைகிறது. மிகவும் புகழ்பெற்ற இச்சுற்றுலா தளத்தில் ஆடி பெருக்கில் கர்நாடக மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கனக்கான மக்கள் மற்றும் புதுமண தம்பதியர்கள் புனித நீராடுவது வழக்கம்.

மேலும் ஆடி 18ம் நாள் தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறையாக அறிவித்து ஒகேனக்கலில் 3 நாட்கள் தமிழக அரசின் சார்பில் பாராம்பரிய கலைகள் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் ஆடிபெருக்கு விழா கொண்டாடுவது வழக்கம். சுற்றுலா பயணிகள் மற்றும் புதுமண தம்பதிகள் புனித நீராடி மற்றும் மாஜஜ் செய்தும் படகில் சவாரி செய்தும் மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் இந்தாண்டு கொரோனோ வைரஸ் காரணமாக தமிழகத்தில் சுற்றுலா தளத்தில் ஒகேனக்கல் தடை செய்யப்பட்ட சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனோ காரணமாக ஒகேனக்கலில் புதுமண தம்பதியர்கள் நீராடுவதற்கும் பொதுமக்கள் வருவதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை செய்யப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் பாதையில் பொதுமக்கள் செல்லதவாறு கேட் அமைத்து பூட்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவேரி ஆறு கரையோறங்களிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மேகலா ஒகேனக்கல் பகுதியில் ஆய்வில்; ஈடுபட்டுள்ளார். ஆடி 18ம் நாள் பல ஆயிரம் போத் புனித நீராடிய காவேரி ஆற்றில் தற்போது ஒருவர் கூட இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

Views: - 1

0

0