ஒகேனக்கல்லுக்கு தலைஆடியை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள்: திருப்பி அனுப்பிய போலீசார்

17 July 2021, 3:54 pm
Quick Share

தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு தலைஆடியை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பினர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில், ஆடிமாதம் முதல் நாளில், ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மற்றும் புதுமண தம்பதியினர் புனித நீராடி, புத்தாடை உடுத்தி அங்குள்ள காவிரி அம்மனை வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இன்று தலை ஆடியை கொண்ட ஏராளமான புதுமண தம்பதியினர் மற்றும் சுற்றுலாப்பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்தனர். ஆனால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகைக்கு தொடர்ந்து தடை நீடித்து வருவதால், காவல்துறையினர் செக்போஸ்ட் அமைத்து தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திருப்பி சென்றனர். ஆடி மாதம் என்றாலே ஒகேனக்கல் களைக்கட்டி காணப்படும் ஆனால் கொரோனா தொற்று காரணமாக அனுமதியில்லாததால் வெறிசோடி காணப்பட்டது.

Views: - 91

0

0