ஒகேனக்கலில் விநாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி நீர் வரத்து குறைவு

10 August 2020, 3:23 pm
Quick Share

தருமபுரி: கேரளா, கர்நாடகம் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து வருவதால் ஒகேனக்கலில் விநாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடி நீர் வரத்து குறைந்துள்ளது.

கேரளா கர்நாடகம் மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கபினி அணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்த நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து நேற்று காலை முதல் வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தன.

தற்போது கேரளா கர்நாடகம் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் விநாடிக்கு 92,852 கன அடியாக குறைத்து வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலு விற்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக வருகின்றன. மேலும் கர்நாடகா கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து தமிழகத்திற்குத் திறந்துவிடப்படும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள இந்த வெள்ளப்பெருக்கால் பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் செல்கிறது.

குறிப்பாக பிரதான அருவி தண்ணீரில் மூழ்கியும். சுமார் 100 அடி ஆழமுள்ள ஐந்தருவி பகுதி தண்ணீரில் மூழ்கி சமமாக செல்கின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருவதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதால் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகிறது.

Views: - 4

0

0