எல்.ஐ.சி முகவர் வீட்டில் திருட்டு: 92 ஆயிரம் ரூபாய் மற்றும் 8 சவரன் தங்க நகை கொள்ளை

15 April 2021, 6:34 pm
Quick Share

தருமபுரி: கடத்தூர் அருகே பூட்டியிருந்த எல்.ஐ.சி முகவர் வீட்டில் 92 ஆயிரம் ரூபாய் மற்றும் 8 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் கடத்தூரை அடுத்த ஒடசல்பட்டியில் பகுதியில் சரவணன் என்பவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். எல்ஐசி முகவராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த 13 ந் தேதி தனது உறவினரின் சுபநிகழ்சிக்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு நிகழ்சியில் கலந்து கொள்ள வெளியூர் சென்று விட்டார். வெளியூர் சென்ற விட்டு இன்று மாலை தனது வீட்டிற்கு திரும்பிய சரவணன் விட்டின் முன் பக்க கதவு உடைக்கபட்டு இருந்ததை கண்டு அதிர்சியடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பாரத்தபோது உள்ளே இருந்த பீரோக்கள் உடைக்கபட்டு நகைபெட்டிகள் மற்றும் துணிகள் வீடு முழுவதும் சிதறிகிடந்தை கண்டு மொரப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து காவல் துறையினரின் உதவியோடு வந்து பாரத்தபோது பீரோக்குள் இருந்த ரொக்கம் 92 ஆயிரம் மற்றும் 8 சவரன் தங்க நகைகள் திருடி சென்றது தெரியவந்தது. வழக்கை பதிவு செய்த காவல் துறையினர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். அதனையடுத்து காவல் துறையினர் வீட்டில் கொள்ளையடித்த நபர்களை தேடி வருகின்றனர். இதே போல் கடந்த 10 ந் தேதி மொரப்பூரில் நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற எல்ஐசி மேலாளர் கண்ணன் என்பவரின் வீட்டிலும் வெளியூர் சென்றுருந்த நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 46 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடித்தது குறிப்பிடதக்கது.

Views: - 27

0

0